search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயா கப்பல்"

    ரூ. 185 கோடி செலவில் உருவான கடலோர காவல் படை புதிய ரோந்து கப்பல் சென்னை துறைமுகத்தில் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. #Vijayaship #Patrolship
    சென்னை:

    சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.185 கோடி செலவில் கடலோரக் காவல் படைக்கு புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’ கட்டப்பட்டது.

    பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன வடிவில் ரூ.185 கோடி செலவில் இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. 2100 டன் எடையும், 98 மீட்டர் நீளம் 15 மீட்டர் அகலத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் இந்த கப்பல் செல்லும்.

    இந்த கப்பலில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, மாசு கட்டுப்பாட்டு கருவிகள், கண்காணிப்பு கருவிகள், அதிநவீன ரக துப்பாக்கிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கப்பலின் பெரும்பான்மையான பாகங்கள் உள் நாட்டில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    இந்த ரோந்து கப்பலில் 11 உயர் அதிகாரிகள், உள்பட 102 பேர் பணியில் இருப்பார்கள். 5 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

    கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    கடலோர காவல் படையை நவீனப்படுத்தும் வகையில் பழைய கப்பல்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய ரோந்து கப்பல்கள் கட்டமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.


    புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’ நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று காலை சென்னை துறைமுகத்தில் நடந்தது. பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரோந்து கப்பல் ‘விஜயா’வை முறைப்படி நாட்டுக்கு அர்ப்பனித்தார்.

    இதில் கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராஜேந்திராசிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி. பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Vijayaship #Patrolship
    ×